

பொதுமக்கள் தங்கள் குறை களை தெரிவிக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்த தகவல்களை பெறவும் ஆவடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதிதாக ‘மொபைல் ஆப்’ மற்றும் இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையின் புறநகர் பகு தியான ஆவடியில் 5 லட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ராணுவ பீரங்கிகள் தயாரிக்கும் கனரக வாகன தொழிற்சாலை, ராணுவத்துக்குத் தேவையான ஆடைகள் தயாரிக்கும் தொழிற் சாலை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை, இந்திய விமானப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. அத்துடன், ஏராளமான தனி யார் பள்ளிகள் மற்றும் கலை அறிவியல், பொறியியல் கல்லூ ரிகள் உள்ளன. இதனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வசித்து வருகின் றனர்.
இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் இத்தொகு தியில் அதிமுக சார்பில் போட்டி யிட்ட க.பாண்டியராஜன் வெற்றி பெற்றார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் தேர்தலில் வெற்றி பெற்றால் இத் தொகுதி மக்களின் குறை களை நிவர்த்தி செய்ய புதி தாக இணையதளம் மற்றும் செல்போன் செயலி (ஆப்) உரு வாக்கப்படும் என தெரிவித்தார்.
இதன்படி தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் புதிதாக இணைய தளம் மற்றும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து, க.பாண்டியராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
www.kpandiarajan.com என்ற பெயரில் இணையதளத்தையும், MyAvadi என்ற பெயரில் செல்போன் செயலியையும் (ஆப்) உருவாக்கியுள்ளேன். சிறந்த மக்கள் சேவையையும், நேர்மை யான ஆட்சியும் மக்களுக்கு வழங்குவதே தமிழக முதல் வரின் முக்கிய நோக்கம். தகவல் தொழில்நுட்பத்தின் உத வியால் இவற்றை வழங்க முடியும். மேற்கண்ட செல்போன் செயலி மூலம் மக்கள் தங் கள் குறைகளை எனக்கு தெரிவிக்கலாம். உடனடியாக அதற்குரிய சான்றையும் பெற் றுக்கொள்ளலாம். தங்கள் குறை கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
இதைத் தவிர, அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தெரிந்துகொள்ளவும், அவற் றுக்கு விண்ணப்பிக்கவும், சட்டப் பேரவை உறுப்பினரின் நிதி எவ்வளவு, அது எதற்காக செலவிடப்பட்டு வருகிறது போன்ற தகவல்களையும் தெரிந் துகொள்ள முடியும். ஆதார் எண், வாக்காளர் அடையாள எண் கொண்ட தொகுதி மக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு பாண்டியராஜன் கூறினார்.
இதற்கிடையே, இத்திட்டத் துக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து, ஆவடியில் 30 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வரும் குடும்பத்தலைவி வாசுகி கோட்டீஸ்வரன் கூறும்போது, ‘‘ஆவடி ஒரு காஸ்மோபாலிடன் நகரமாக திகழ்கிறது. அதனால், மக்களின் குறைகளை தெரி விக்க புதிதாக இணையதளம் மற்றும் செல்போன் செயலியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், இத்தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.