

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட விவகாரத் தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு சசிகலா அணி அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் இன்று முடிவை அறிவிக்கிறது.
முதல்வராக இருந்த ஜெய லலிதா மறைவுக்குப் பின், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நிய மிக்கப்பட்டார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அவர் நியமிக்கப்பட்டது செல்லாது என்று பன்னீர்செல்வம் அணி கூறி வருகிறது. இது தொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வும் கூடுதல் ஆவணங்களை இரு தரப்பும் ஏப்ரல் 17-ம் தேதிக்குள் (இன்று) சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந் தது. அதன்படி, கூடுதல் ஆவணங் களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று முடிகிறது.
இதற்கிடையில், ஆவணங்களை தயார் செய்து சமர்ப்பிக்க மேலும் 8 வாரம் அவகாசம் வேண்டும் என சசிகலா அணியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கடந்த வியாழக் கிழமை மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவின் மீது இதுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தர வையும் பிறப்பிக்கவில்லை. கடந்த 3 நாட்கள் விடுமுறை என்பதால் இன்று அந்த மனு மீதான உத்தரவை பிறப்பிக்கலாம் என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஓபிஎஸ் அணி யைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணை யத்துக்கு நேற்று ஒரு மனுவை அனுப்பியுள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
சசிகலா நியமனம் தொடர்பாக இடைத் தேர்தலுக்கு முன்னதாகவே ஆணையம் முடிவெடுத்திருந்தால், தேர்தலில் இத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, விரைவாக ஆணையம் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.