

அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல் பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெறவுள்ளன.
தலைமை கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வரும் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் சிலைக்கு அல்லது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.