தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி: 4-வது நாளாக தொடர்கிறது

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி: 4-வது நாளாக தொடர்கிறது
Updated on
1 min read

தீ விபத்துக்குள்ளான தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 4-வது நாளாக தொடர்கிறது.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் இயங்கிவந்த தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கட்டிடம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இன்று 4-வது நாளாக கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. கட்டிடத்தைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டுள்ளன. இதனால், வார விடுமுறை நாட்களில் பரபரப்பாக காணப்படும் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

உஸ்மான் சாலையிலும், அருகிலுள்ள பாலத்தின் மீதும் போக்குவரத்து தடை நீடிப்பதால், வெங்கட் நாராயணா சாலை வழியாகவே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள பிற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொறுமை யாகவே கட்டிடத்தை இடிக்கும் பணிகள், நடைபெற்று வருகின்றன.

கட்டிடத்தை இடிக்கும் பணியை மாநகராட்சி, தீயணைப்பு, காவல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டுச் செல்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கட்டிடத்துக்குள் இருப்பதால் எந்நேரமும் தீ விபத்து ஏற்படலாம் எனக் கருதி தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணம் கருதி இரவில் கட்டிடம் இடிக்கப் படுவதில்லை என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in