

யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
ஆளுநர் வித்யாசாகர் ராவ்:
யுகாதி பண்டிகையை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:
பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழக மக்களோடு நல்லுறவை பேணி வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் எல்லா வளங்களையும் பெற்று வாழ வேண்டுமென யுகாதி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:
தமிழக மக்களுடன் இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்டை மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டி, நீண்ட நெடிய திராவிட குடும்பத்தின் உறவை தொடர்ந்திட வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
யுகாதி கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் அனைவரும் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று வாழ வேண்டுமென நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்:
யுகாதி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னடம், மராட்டி மற்றும் துளு ஆகிய மொழிகளைப் பேசும் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
தமிழர்களுடன் பாசத் துடன் பழகும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு யுகாதி பண்டிகை வாழ்த்து களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
யுகாதி திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனை வருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
தமிழகத்தில் உள்ள தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.