

ஆர்.கே.நகர் தொகுதி பாதுகாப்புப் பணியில் காவல் ஆணையர் மேற்பார்வையில் 1000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஓபிஎஸ் அணியினர் மின்கம்பம் சின்னத்திலும், தினகரன் அணி யினர் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். மேலும் திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. இதனால் 8 முனைப் போட்டி நிலவுகிறது.
அனைத்து கட்சியினரும் தற் போது பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டுள்ளனர். அவர்க ளுடன் ஆயிரக்கணக்கான தொண்டர் களும் திரண்டுள்ளனர்.
இதனால், ஆர்.கே.நகரில் கூட்டம் அலைமோதுகிறது. முக்கிய நிர்வாகிகள் திரண்டு வருவதால் காவல் ஆணையர் கரன் சின்ஹா மேற்பார்வையில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி யூர்களில் இருந்து வந்து ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ளவர் கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா என நுண் ணறிவு மற்றும் உளவுப் பிரிவு போலீஸார் கண்காணித்து வரு கின்றனர். ரோந்து பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.