உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் ஆர்.சி.பால் கனகராஜ் வெற்றி

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் ஆர்.சி.பால் கனகராஜ் வெற்றி
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.சி.பால் கனகராஜ் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்று உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், முன்னாள் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் உள்ளிட்ட 4 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 12 பேரும், செயலாளர் பதவிக்கு 6 பேரும், பொருளாளர் பதவிக்கு 6 பேரும், நூலகர் பதவிக்கு 4 பேரும் போட்டியிட்டனர். இவர்களைத் தவிர 6 சீனியர் செயற்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 24 பேரும், 5 ஜூனியர் செயற்குழு உறுப்பினர் இடங்களுக்கு 43 பேரும் போட்டியிட்டனர்.

தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் சுமார் 7 ஆயிரத்து 300 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த நிலையில் மாலை 5 மணி வரை 5 ஆயிரத்து 337 பேர் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இரவு 8 மணி நிலவரப்படி தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் ஆர்.சி.பால் கனகராஜ் மற்றவர்களைவிட அதி்க வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார் செயலாளராக அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in