

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2733 பயனாளி களுக்கு திருமண நிதியுதவிகளை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் மொத்தம் 2733 பயனாளி களுக்கு நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கும் விழா தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் ஆகிய மண்ட லங்களில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கடந்த 4 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 888 பயனாளிகளுக்கு ரூ.63 கோடியே 59 லட்சமும், 67 ஆயிரம் கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விழாவில் மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பா.பெஞ்சமின், மாநகராட்சி துணை ஆணையர்கள் டி.ஜி.வினய், அருண் சுந்தர் தயாளன், மாவட்ட குடும்பநல அலுவலர் எஸ்.மனோகரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.