நீரா, பதநீர் விற்பனையை அனுமதித்து மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம்: பேரவையில் மசோதா அறிமுகம்
தமிழகத்தில் தென்னை விவசாயி களின் கோரிக்கைகளை ஏற்று, தென்னையில் இருந்து புளிக்க வைக்கப்படாத ‘நீரா’ பானம் எடுத்து விற்பது மற்றும் அதில் இருந்து பிஸ்கட், தேன், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து விற்க அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென்னை மரங் களில் இருந்து நீரா பானத்தை வடித்து இறக்கி, பக்குவப்படுத்தி, நீராவை விற்கவும், ஏற்றுமதி செய்யவும், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப் பயன் படுத்தவும் உரிமம் வழங் கும் வகையில், கடந்த 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத் துள்ளது.
இதன்படி, நீரா, பதநீரை புளிக்க வைக்காமல் அருந்துவதற்கும், பனை வெல்லம், தேன், பிஸ்கட், சர்க்கரை மற்றும் அரசால் அறி விக்கப்பட்டுள்ள பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இவற்றை வடிப்பதற்குமான உரிமம், அனு மதியை மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆணையர், தமிழ்நாடு பனை பொருட்கள் மேம்பாட்டு வாரிய பதிவாளர் அல்லது இதற்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் வழங்கலாம். அதேபோல, நீரா, பதநீரை இருப்பு வைக்க, ஏற்றிச் செல்ல, விற்கவும் அனுமதி வழங்கலாம் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்து, கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக்கெ ாள்ளப்பட்ட பிறகு, மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பி.தங்கமணி அறிமுகம் செய்தார்.
