Published : 14 Jun 2017 08:22 AM
Last Updated : 14 Jun 2017 08:22 AM

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீடு

சென்னையில் வாகன விபத்துகளை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட் டுள்ளார்.

சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அனைத்து சிக்னல்கள் மற்றும் சந்திப்புகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பலகைகள் மூலமும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ் வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சி களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக வாகன விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான சிடி தயாரிக்கப்பட்டது. பின்னணி பாடகர் கானா பாலா சாலை விபத்து விழிப்புணர்வு தொடர்பான பாடலை எழுதி பாடியிருந்தார். இயக்குநர் நிரஞ்சன் இயக்கி இருந்தார். இந்த விழிப்புணர்வு பாடல் அடங்கிய சிடி நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் வெளியிட கானா பாலா பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் காவல் ஆணையர் பேசும்போது, “சாலை விபத்து விழிப்புணர்வை மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டுச் செல்ல விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பேஸ்புக், யூ டியூப், வாட்ஸ்-அப் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல உள்ளோம். திரையரங்குகளில் ஒளிபரப்புவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணி காரணமாக ஒரு சில இடங்களில் நெரிசல் உள்ளது. வார்தா புயலால் சேதம் அடைந்த சிக்னல்கள் சரி செய்யும் பணி 15 நாட்களில் தொடங்கும்” என்றார்.

கானா பாலா கூறும்போது, “நான் தப்பு செய்து திருந்தியவன். அடுத்த ஆண்டு முதல் சினிமாவில் பாடுவதை நிறுத்தப்போகிறேன். நகைக்கடை, ஜவுளிக்கடை உள் ளிட்ட வியாபார நோக்கில் வெளி வரும் விளம்பரங்களில் எப்போதுமே பாடுவதில்லை. விழிப்புணர்வு பாடல்களை மட்டுமே தொடர்ந்து பாடுவேன்” என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் அபய் குமார் சிங், சங்கர், இணை ஆணையர்கள் அன்பு, பவானீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x