Published : 16 Aug 2016 08:34 AM
Last Updated : 16 Aug 2016 08:34 AM

தொழில் அதிபர் மகன் கடத்தலில் நண்பர் உட்பட 10 பேர் கைது

கானாத்தூரில் தொழில் அதிபர் மகன் கடத்தல் வழக்கில் நண்பன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட னர்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் கபில் சித்தாலே. தொழில் அதிபர். இவரது மகன் திலக்(27). கடந்த 9-ம் தேதி கானாத்தூரில் ஓர் இடத்தை விலைக்கு வாங்குவது தொடர்பாக பார்க்கச் சென்றபோது சிலரால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித் தனர்.

இதுகுறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் கபில் சித்தாலே புகார் செய்தார். இந்நிலையில் அன்று மாலையே திலக் வீடு திரும்பினார். போலீஸார் நடத்திய விசாரணையில், திலக்கை கடத்திய நபர்கள், ஓர் அறையில் அடைத்து வைத்திருந்ததும், பின்னர் போலீஸுக்கு பயந்து மாலையில் விடுவித்ததும் தெரிந்தது. தனது நண்பன் டேவிட் அஸ்வத்தாமன் என்பவரே ஆட்களை வைத்து தன்னை கடத்தியதாகவும், கடத்த லில் ஈடுபட்ட நபர்கள் பயத்தில் தன்னை விடுவித்து விட்டனர் என் றும் திலக் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து டேவிட் அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், கடத்தலில் ஈடுபட்ட கணபதி, ரமேஷ்குமார், பாலகிருஷ்ணன், சுதாகர், ஜாவித், கலையரசன், சாம்ராஜ், ஜூடு பெரிரா, வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திலக்கும், டேவிட்டும் நண்பர் கள். சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். பலரிடம் கடன் வாங்கி பிரச்சினையில் இருந்த டேவிட், திலக்கை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு இருக்கி றார். இதற்காக கானாத்தூரில் காலி இடம் விற்பனைக்கு உள்ளது என்று கூறி, திலக்கை கானாத்தூர் வரவழைத்து, கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x