பாண்டியன் விரைவு ரயிலில் புதிய நவீன பெட்டிகள்

பாண்டியன் விரைவு ரயிலில் புதிய நவீன பெட்டிகள்
Updated on
1 min read

பாண்டியன் விரைவு ரயில்களில் அதிக பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட எல்எச்பி பெட்டிகள் வரும் 15-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது.

51.7 டன் எடை கொண்ட இந்த ரயில் பெட்டிகள் பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வசதியுள்ளது. சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உட்பட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூர் மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயிலின் (12638/12637) பெட்டிகள் வரும் 15-ம் தேதி முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப் படவுள்ளன. முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட 10 பெட்டிகள் உட்பட மொத்தம் 20 பெட்டிகள் இந்த ரயில்களில் இணைக்கப் பட்டிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in