

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டிக்கெட் முன்பதிவு வசதியில் லாத ஊர்களில் அஞ்சலகங்களின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சில அஞ்சல் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவைக்கு போதிய வரவேற்பு இல்லை. எனவே, அந்த அஞ்சல் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை அடுத்த 3 மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும்.
சேவை ரத்து செய்யப்பட உள்ள அஞ்சல் நிலையங்களின் விவரம் வருமாறு:
மதுரை பிரிவு: ஆலங்குளம், பாவூர்சத்திரம், திசையன்விளை அஞ்சல் நிலையங்கள், சிவகிரி, கொடைக்கானல், நத்தம் துணை அஞ்சல் நிலையங்கள், புதுக் கோட்டை, உடுமலைப்பேட்டை தலைமை அஞ்சல் நிலையம், மதுரை ரிசர்வ் லைன் அஞ்சல் நிலையம், திருப்பத்தூர் நகர அஞ்சல் நிலையம், திருவாடானை அஞ்சல் நிலையம் ஆகிய இடங்களில் ரயில் முன்பதிவு சேவை ரத்து செய்யப்பட உள்ளது.
சேலம் பிரிவில் சேலம் பள்ளிப் பாளையம், எடப்பாடி, அரவக் குறிச்சி, மல்லசமுத்திரம், ஊத்தங் கரை துணை அஞ்சல் நிலையங்கள், திருச்செங்கோடு தலைமை அஞ்சல் நிலையம், ராசிபுரம் அஞ்சல் நிலையம் ஆகிய இடங்களிலும் திருச்சி பிரிவில் திருச்சி கோல்டன் ராக், ரெங்கா நகர், தெப்பக்குளம், முத்துப்பேட்டை, பேராவூரணி, திருவண்ணாமலை மாவட்டம் திருவேட்டிபுறம் துணை அஞ்சல் நிலையங்கள், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் துணை அஞ்சல் நிலையம், செங்கம் அஞ்சல் நிலையம் ஆகிய இடங்களிலும் இச்சேவை ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட 26 அஞ்சல் நிலையங்களில் அடுத்த 3 மாதங்களில் ரயில் முன்பதிவு சேவை ரத்து செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.