Published : 02 Jun 2016 11:37 AM
Last Updated : 02 Jun 2016 11:37 AM

ராமேசுவரம் அருகே உயிருடன் ஆழ்கடலில் விடப்பட்ட விஷ வகை சாமி மீன்

ராமேசுவரம் அருகே உயிருடன் வலையில் பிடிபட்ட விஷ சாமி மீனை அப்பகுதி மீனவர்கள் மீண்டும் ஆழ்கடல் பகுதியில் விட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ளது தனுஷ்கோடி மீனவ கிராமம். புதன்கிழமை கரை வலை இழுக்கு ம்போது விஷம் கொண்ட சாமி மீன் உயிருடன் பிடிப்பட்டது. 20 செமீ நீளமும், 250 கிராம் எடையும், 15 செ.மீ. உயரமும் உடையதாகவும் அது இருந்தது.

இந்த மீன் குறித்து மரைக்கா யர்பட்டினத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச் சியாளர்கள் கூறியது:

ராமேசுவரம் மீனவர்களால் சாமி மீன் என்று அழைக்கப்படும் Pterois fish களில் மொத்தம் 12 இனங்கள் இதுவரையிலும் கண்டறியப்பட்டுள்ளன. அதி கபட்சம் ஒரு அடி நீளம் வரை யிலும் வளரக்கூடியது. இதில் சிவப்பு, வெள்ளை, பழுப்பு, கருப்பு வர்ணங்களில் உணர் இழைகள் அமைந்திருக்கும். சாமி மீன் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது.

அகன்ற இழைகளையும், தனது நிறங்களையும் காட்டி தனது இணையையும், இரை யையும் கவரும். சாமி மீன் கடலின் பார்களில் அதிகம் வசிக் கக்கூடியது. பார் மீன்களில் ஏறத்தாழ 50 வகையான மீன்களை இவை உட்கொள்வதுடன் சிறிய சாமி மீனையும் இரையாக்கிக்கொ ள்ளும். இதன் வயிறு பெரியது என்பதால் சாமி மீன் வயிற்றில் ஒரே வேளையில் 30 வகையான இரைகளும் ஒரே நேரத்தில் கண் டறியப்பட்டுள்ளது.

சாமி மீனின் உடம்பில் 18 நச்சு முட்கள் இருக்கும். இவற்றில் 13 முட்கள் முதுகுத் தூவியில் காணப்படும். எனினும், சுறா, அஞ்சாளை, களவாய், கிளாத்தி மீன்கள் சாமி மீன்களை இரை யாக்கிக் கொள்ளும். இதன் நஞ்சு இந்த மீன்களை ஒன்றும் செய்வதில்லை.

சாமி மீனின் முட்கள் மனிதனை குத்தினால் குத்திய இடத்தில் கடும் வேதனை ஏற்படும்.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் வாயில் வெள்ளை நுரைதள்ள ஆரம்பித்துவிடும். உடனே மருத்துவம் செய்யப் படவில்லை என்றால் இறப்பு ஏற்படலாம்.

கடல் பார்களில் வசிக்கக்கூடிய சாமி மீன்கள் மீனவர்கள் வலையில் அரிதாகவே சிக்கக் கூடியது.

சாமி மீன் சிக்கினால் அதிக ளவில் மீன்கள் கிடைக்கும் என்பது மீனவர்களின் நம்பிக்கை யாகும். இதனால் மீனவர்கள் அதனை திரும்ப கடலிலேயே விட்டுவிடுகின்றனர் எனத் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x