Published : 20 Aug 2016 08:08 AM
Last Updated : 20 Aug 2016 08:08 AM

திருவள்ளூர், திருப்பூரில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் அமைக்கப்படும்: அமைச்சர் பாலகிருஷ்ணா அறிவிப்பு

ஈரோட்டில் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம், திருவள்ளூர், திருப்பூரில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள், சென்னையில் கால்நடை நோய் முன்னறிவிப்பு மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் கால்நடைத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதிலளித்து துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது:

தமிழகத்தில் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.211.19 கோடியில் 60 ஆயிரம் இலவச பசுக்கள் வழங்கப்பட்டு, தினமும் 2.66 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போது 75,796 கன்றுகள் பிறந்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.37.89 கோடி. இத்திட்டத்தில் 6.71 லட்சம் டன் தொழு உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 1.35 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.108.04 கோடி.

வெள்ளாடு, செம்மறியாடு வழங்கும் திட்டத்தில் 7 லட்சம் பேருக்கு ரூ.905.37 கோடி மதிப்பில் 28 லட்சம் வெள்ளாடு கள், செம்மறியாடுகள் வழங்கப் பட்டுள்ளன. இதில் 44.67 லட்சம் குட்டிகள் பிறந்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1,114 கோடி.

கோழியின மேம்பாட்டு திட்டத் தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.97.35 கோடியில் 2,362 கறிக்கோழி பண்ணைகள், 10,358 நாட்டுக் கோழிப் பண்ணைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து 24.23 டன் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாநில தீவன மேம்பாட்டு திட்டத் துக்கு ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், 112 லட்சம் டன் பசுந்தீவனம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பாதுகாப்பு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2.31 கோடியில் 5,500 என 5 ஆண்டுகளில் 27,500 கால்நடை பாதுகாப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கால்நடை காப்பீட்டு திட்டத்தின் மூலம் 7.11 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.37.16 கோடியில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை உற்பத்தியில் கால்நடைகளின் பங்கு 42 சதவீதமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.6 கோடியில் அமைக்கப்படுகிறது. சென்னை கால்நடை மருத்துவ மனையில் ‘நானோ தொழில்நுட்ப மையம்’ ரூ.1.20 கோடியில் உருவாக்கப்படுகிறது.

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதற்கான தடுப்பூசி கண்டறியும் நோக்கில், பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.12.75 கோடியில் உலகத் தரம்வாய்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல் முறையாக திருச்சி, தஞ்சை, நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.6.34 கோடியில் ‘அம்மா நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்திகள்’ திட்டம் செயல்படுத் தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத் தில் கால்நடை தீவன ஆய்வுக்கூடம் ரூ.2.56 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. கால்நடைகள் நோயால் இறப்பதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் புதிதாக 2 கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் அமைக்கப்படும். கால்நடை நோய்கள் குறித்து முன்னறிவிப்பு செய்யும் வகை யில் சென்னையில் கால்நடை நோய் நிகழ்வியல் பிரிவு உருவாக் கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x