Published : 07 Feb 2017 08:17 AM
Last Updated : 07 Feb 2017 08:17 AM

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேகமாக சென்ற கார் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பரிதாப பலி: மருத்துவ மாணவருக்கு தீவிர சிகிச்சை

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அதிவேகமாக சென்ற கார் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற மருத்துவ மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றபோது இந்த விபத்து நடந்தது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளர் களாக பணியாற்றி வந்தவர்கள் அரவிந்தன் (23), மித்தின் மனோகர் (22), தீபக் (22). குன்றத்தூர் அருகே மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பவர் பிரபு (23). இவர்கள் 4 பேரும் நண்பர்கள்.

இவர்களது நண்பருக்கு பூந்தமல்லியில் உள்ள மண்ட பத்தில் நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக 4 பேரும் காரில் மண்டபத்துக்குப் புறப்பட்டனர். காரை பிரபு ஓட்டினார். வண்ட லூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை யில் நெரிசல் இருக்காது என்ப தால், பெரும்பாலும் அனைத்து வாகனங்களும் இங்கு வேகமாகச் செல்லும். பிரபுவும் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். மாங்காடு அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு சென்ற கார், சாலையோரம் இருந்த 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இதில் கார் உருக்குலைந்தது.

அருகே வாகனங்களில் சென்றவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். தகவல் கிடைத்து, பூந்தமல்லி போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீ ஸாரும் விரைந்து வந்து, காருக் குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் அரவிந்தன், மித்தின் மனோகர் ஆகியோர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர்.

படுகாயம் அடைந்த தீபக், பிரபு ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். சிறிது நேரத்தில் தீபக்கும் உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற பிரபுவுக்கு உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x