

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் பணிபுரியும் காவல் ஆய்வாளரின் மகளுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காவலர் குடியிருப்புப் பகுதியில் சுகாதாரத் துறையினர், சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள் ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவியது. இதையடுத்து அங்கு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மர்ம காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம், கூடு வாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி யதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் சிறப்பு முகாமிட்டு கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலை யில், காஞ்சிபுரம் நகரத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் 7 வயது மகளுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் வசித்த குடியிருப்பு மற்றும் அதன் அருகே உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில், சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றி, குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி காவலர் குடியிருப்புப் பகுதிக்கு வந்து, சுகாதாரத் துறையினரின் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், காவலர் குடியிருப்புகளில் வசிக்கும் நபர்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்றும் சுகாதாரத் துறையினர் சிகிச்சை முறைகள் மற்றும் விவரங்களை சேகரிக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் சுகா தார மாவட்ட துணை இயக்குநர் செந்தில்குமார் கூறும்போது, “காஞ் சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத் துறை மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. குடியிருப்புகளில் ஆய்வு செய்து அங்குள்ள மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என கண்டறிய நகரப் பகுதியில் மட்டும் 90 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் மற்றும் தனியார் நர்ஸிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 160 மாணவிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் முஜிபூர்ரகு மான் கூறும்போது, “சுகாதாரத் துறையினருடன், நகர சுகாதாரத் துறை பணியாளர்கள் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் தேங்குவதைத் தடுப்ப தற்கான பணிகளை மேற்கொள்ளு மாறு அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகளை கண்காணிக்க தனி யாக குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினரின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் நபர்களுக்கு, ரூ.1,000 அபாரதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், டெங்கு உட்பட பல்வேறு நோய்கள் பரவுவதைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.