

தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ பாஜக காரணமாக இருக்காது. ஆட்சியை வலுவாக நடத்த அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். கடந்த 6 மாதமாக தமிழகத்தில் இக்கட்டான சூழ் நிலை நிலவி வருகிறது. இது தமிழகத்துக்கு எந்த நிலையிலும் நல்லதல்ல.
தமிழகத்துக்கு நல்ல காலம்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் யார், யார் மீது வழக்கு தொடர வேண்டும் எனக் கூறியுள்ளதோ அது நிகழ்ந்தாக வேண்டும். தமிழகத்தில் நிலவும் நிலையில்லா ஆட்சிக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக பல குழுக்களாக பிரிந்திருப்பது நல்லதல்ல. தமிழ கத்துக்கு நல்ல காலம் பிறந்து கொண்டிருக்கிறது. கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது என்றார்.
கிடப்பில் போட்டது தமிழக அரசு
இந்நிலையில் புதுக்கோட் டையில் நேற்று செய்தியாளர்களி டம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘ரூ.100 கோடியில் ஆறு, குளங்களைத் தூர் வாருவதாக தமிழக அரசு அறிவித்த திட்டம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. அப்படியே கிடப்பில் உள்ளது. தமிழகத்தில் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலப்படம் செய்து விற்பதைத் தடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்யாமல் மக்கள் பிரச்சினை களுக்கு திமுக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணப்பரிமாற் றம் நடைபெற்றதால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் வெளி நடப்பு செய்யாமல் மக்கள் பிரச்சி னைகளுக்கு திமுக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்னும் மூன்றே மாதத்தில் தமிழக அர சியலை எங்களை நோக்கித் திருப்பி விடுவோம்’ என்றார்.