

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை புரிந்த தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக் கரசர் திண்டிவனத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
வறட்சியால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களின் குடும்பத்தாருக்கு கருணைத் தொகையாக ரூ 15 லட்சம் வழங்க வேண்டும். வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழகத் திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டது. இந்த அரசில் இந்தத் திட்டத்தில் 4 மாதமாக ஊதியம் வழங் கப்படவில்லை. விவசாயமும் இல்லை. விவசாய வேலையும் இல்லை என்பதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். மேலும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழை எளிய மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறப்பில் பல சந்தேகங் கள் வந்து வழக்குகள் பதிவாகியுள்ளது. நீதிபதிகள் விசாரித்து உரிய தீர்ப்பை வழங்க வேண்டும். அதிமுக பொது செயலாளராக வரவேண்டும் என்பதும், யார் முதல்வர் பதவி வகிக்கவேண்டும் என்பதும் அக்கட்சி நிர்வாகிகள் முடிவு. இதில் காங்கிரஸ் கட்சித்தலைவர் என்ற முறையில் எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.