Published : 14 Aug 2016 10:20 AM
Last Updated : 14 Aug 2016 10:20 AM

உலக மருத்துவத்துக்கு தாயாக சித்த மருத்துவம்: பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் பெருமிதம்

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் உலக சித்தர் மரபுத் திருவிழா சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் கலந்துகொண்டு, விழாவைத் தொடங்கிவைத்து, விழா மலரை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழ் நாகரிகம் உலகிலேயே மிகப் பழமை யானது. உலக மருத்துவத்துக்கு எல்லாம் தாயாக இருக்கக்கூடியது சித்த மருத்துவம். ஹோமியோபதி மருத்துவம் கூட, தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச் சுவடிகளில் இருந்து கொண்டுசெல்லப்பட்டதுதான் என்று வரலாறு கூறுகிறது.

சித்தர்களால் கண்டுபிடிக்கப் பட்ட வர்மக்கலை மற்றும் நாடி மருத்துவம்தான், சீனாவில் அக்கு பஞ்சர் சிகிச்சை முறையாக பின் பற்றப்பட்டு வருகிறது. சித்தர்களின் மூலிகையில் இருந்துதான் மலர் மருத்துவம் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆயுர் வேத மருத்துவத்துக்கு கூட தாயாக சித்த மருத்துவம் விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சித்த மருத்துவ ஆய்வுக் கழக தலைமை இயக்குநர் ஆர்.எல்.ராமசாமி பேசும்போது, “சித்த மருத்துவம் மூலம் நோய்கள் குண மாவது தற்போது அறிவியல் பூர்வ மாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அரசு உப்புத்துறை கண்காணிப் பாளர் டி.உதயசந்திரன் பேசும்போது, “தமிழகத்தில் பழங்கால கல்வெட்டு கள், ஓலைச் சுவடிகள் படிக்கப்படாமல் உள்ளது. அதை மின் உருவாக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

ஆவின் நிறுவன தலைமை கண் காணிப்பு அதிகாரி எம்.ரவி பேசும் போது, “வைரஸ் நோய்களை ஆங்கில மருந்துகளால் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அவற்றை சித்த மருத்துவமே குணப்படுத்தும்” என்றார்.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் நிதியுதவி வழங்கினார். விழாவின் தொடர்ச்சியாக வீட்டு மருத்துவம், சித்த மருத்துவத்தில் மனநலன், மகளிர் மருத்துவம் ஆகிய தலைப்புகளில் சிறப்பு அமர்வுகளும் நடைபெற்றன. மாலையில் நாட்டுப்புற இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் உலக சித்தா அறக் கட்டளை தலைவர் பி.செல்வசண் முகம், இயக்குநர் எம்.ஏ.ஹூசைன், மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் ஜி.பால சந்திரன், கல்லூரி முதல்வர் ஆர்.மணிமேகலை, தமிழ்த்துறை தலைவர் அபிதா சபாபதி பங்கேற்றனர். இன்றும் மாநாடு தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x