Published : 27 Jan 2017 08:36 AM
Last Updated : 27 Jan 2017 08:36 AM

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு பயிலரங்கம்: 60-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பணியாளர்கள் பயன்

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பயிலரங்கம் மூலம் 60-க் கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் பணியாளர்கள் பயனடைந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வார்தா புயலால் தொழிற்சாலைகளின் மேற்கூரைகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணி அனைத்து தொழிற் சாலைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உயரமான மேற்கூரை களைச் சீரமைக்கும் பணியின்போது ஏற்படக் கூடிய விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியில் பயிலரங்கம் நடைபெற்றது.

இந்த பயிலரங்குக்கு தலைமை தாங்கிய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் எஸ்.பொன்சிங் மோகன்ராம் பேசுகை யில், “தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு பயிற்சி வழங்கி, அவர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதை தொழிற் சாலையின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள அனைத்து அலுவலர்களும் இணைந்து உறுதி செய்ய வேண்டும். உயரத்தில் பணிபுரிய தேவையான சுய பாதுகாப்பு சாதனங்களான ஹெல்மெட், பாதுகாப்பு கச்சை, லைப் லைன் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி விபத்துகள் ஏற்படா வண்ணம் பணியாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இதுதவிர, சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் எஸ்.வேணுகோபால், துணை இயக்குநர் விஜயன் ஆகியோர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிலரங்கம் நடத்தினர்.

இந்த பயிலரங்கில், எஸ்ஆர்எஃப் கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையின் முதன்மை மேலாளர் ஆர்.நாகராஜ், கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற் சாலைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுப்பிரமணி, 60-க்கும் மேற் பட்ட தொழிற்சாலைகளின் பணியாளர் கள், அலுவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x