Published : 29 Jul 2016 10:40 AM
Last Updated : 29 Jul 2016 10:40 AM

31 ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர்: உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் - அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாள ரும், முதல்வருமான ஜெயலலி தாவின் முன்னிலையில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமாகா, தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி களைச் சேர்ந்த 31,834 பேர் அதிமுகவில் நேற்று இணைந் தனர்.

அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் வலசை ரவிச்சந்திரன் தனது கட்சியைக் கலைத்து விட்டு, மாநில நிர்வாகிகள் உட்பட 5,000 பேருடன் அதிமுகவில் இணைந்தார். மதிமுக மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, தமாகா மாநில துணைத் தலைவர் பானுமதி கருணாகரன், மாநிலப் பொதுச் செயலாளர் மாலினி ரமேஷ்கண்ணன், தமாகா பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எச்.மின்காஜ், பாஜகவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கணேஷ் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் கே.உலகநாதன் தலைமையில் 1700 பேரும், திமுகவை சேர்ந்த கோவை மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ப.கதிரேசன் தலைமையில் 500 பேரும், தேமுதிகவை சேர்ந்த கோவை மாவட்ட துணை செயலாளர் ஜி.சுப்பிரமணியம் தலைமையில் 500 பேரும் அதிமுகவில் இணைந்தனர். சென்னை ராயப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் இணைந்தவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டைகளை முதல் வர் ஜெயலலிதா வழங்கினார்.

பின்னர், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

அதிமுக என்னும் மகத்தான மக்கள் பேரியக்கத்தில், இணைய வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். இதுவரையில் பல்வேறு கட்சிகளிலும், இன்ன பிற அமைப்புகளிலும், பணியாற்றி வந்த 31,834 பேர் இன்று முதல் அதிமுக அடிப்படை உறுப்பினர் களாக இணைந்துள்ளீர்கள். உங்கள் வரவு நல்வரவு ஆகுக. இனி, உங்கள் அரசியல் வாழ்வில் புது வசந்தம் மலரும்.

நீங்கள் அனைவரும் இன் றைக்கு உள்ள உற்சாகத் தோடு அதிமுக வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் க.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x