ஆர்.கே.நகரில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட், விசிக எதிர்ப்பு: 20 மாதங்களில் முடிவுக்கு வந்த மக்கள் நலக் கூட்டணி

ஆர்.கே.நகரில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட், விசிக எதிர்ப்பு: 20 மாதங்களில் முடிவுக்கு வந்த மக்கள் நலக் கூட்டணி
Updated on
2 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்லில் போட்டியிடுவது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கள் கட்சி (விசிக) எதிர்ப்பு தெரிவித்த தால் 20 மாதங்கள் நீடித்த மக்கள் நலக் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற இயக்கத்தை தொடங்கின. காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக, பாமக ஆகிய 5 கட்சிகளுக்கும் எதிரான மாற்று அரசியல் தேவை என்பதற்காக புதிய இயக்கம் தொடங்கப்படுவதாக அவர்கள் அறிவித்தனர்.

தொடங்கப்பட்ட சில மாதங்களி லேயே இந்த அமைப்பில் இருந்து காந்திய மக்கள் இயக்கம் விலகியது. பின்னர் மக்கள் நலக் கூட்டியக்கம் என்பது மக்கள் நலக் கூட்டணி என பெயர் மாற்றப்பட்டது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, தமாகாவுடன் இணைந்து ம.ந.கூட்டணி போட்டியிட்டது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டார். ஆனால், போட்டியிட்ட அனைத்து இடங் களிலும் தோல்வியை தழுவியதுடன் வெறும் 6 சதவீத வாக்குகளை மட்டுமே இந்தக் கூட்டணி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவும், தமாகாவும் கூட்டணியில் இருந்து விலகின.

மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், மதிமுக மட்டும் ஆதரித்தது. இது ம.ந.கூட்டணியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ம.ந.கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த 2016 டிசம்பர் 27-ம் தேதி வைகோ அறிவித்தார். அதன்பிறகு மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய 3 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டன.

இந்நிலையில், ஏப்ரல் 12-ல் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் உறுதியாக நின்றது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகியவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தின. இதனால் ம.ந.கூட்டணியில் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தர சன், திருமாவளவன் ஆகியோர் பல சுற்று பேச்சு நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

விசிக விலகல்

இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று அறிவித்தது. இதை ஏற்க மறுத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், ‘‘உள்ளாட்சித் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முடிவெடுக்க வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தினோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எங்களோடு உடன்பட்டது. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி தனித்து வேட் பாளரை அறிவித்துவிட்டது. இனி போராட்டக் களத்தில் இணைந்து செயல்படுவோம். தேர்தல் களத்தில் தனித்தனியாக செயல்படுவோம்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘‘ஆர்.கே.நகர். இடைத்தேர்தலை புறக்கணிப்பதா, மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து திருமாவளவனுடன் ஆலோசித்து நாளை (இன்று) அறிவிப்போம். 6 கட்சிகளுடன் தொடங்கப்பட்ட ம.ந. கூட்டணியில் தற்போது 2 கட்சிகள் மட்டுமே உள்ளது. இதுபோல் நடப் பது அரசியலில் சகஜம்’’ என்றார்.

இதன்மூலம் கடந்த 20 மாதங் கள் நீடித்த மக்கள் நலக் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் வட சென்னை மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் போட்டியிடுகிறார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதை நேற்று அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான லோகநாதன் (39) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மீனவர் குடும்பத்தில் பிறந்தவர். கட்சியில் ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர், வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர், சென்னை - செங்கை மீன்பிடி தொழிற்சங்க பொதுச்செயலாளர், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.

வேட்பாளரை அறிவித்த பிறகு நிருபர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘ஊழலை ஒழிக்கவும், வகுப்புவாதத்தை முறியடிக்கவும் மாற்று அரசியல் தேவை என்பதை உணர்ந்து ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறோம். மாற்று அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும் என கருதும் இடதுசாரி ஜனநாயக கட்சிகளும், இதர ஜனநாயக சக்திகளும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதனை ஆதரிக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in