

மதுரை மீனாட்சி அம்மன் கோயி லுக்கு சொந்தமான இடத்தை பட்டா மாறுதல் செய்துவிட்டதாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை நரிமேடு அருகே தனியார் பள்ளி செயல்படும் வளாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் 1.82 ஏக்கர் நிலம் உள் ளது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.55 கோடி. வரு வாய்த்துறை, நகர் நில அளவீடு ஆவணங்களில் மீனாட்சி அம்மன் கோயில் பெயரிலேயே இந்த நிலம் உள்ளது.
இந்நிலையில், இந்த நிலத்தை கடந்த ஜூன் மாதம் பட்டா மாறு தல் செய்து மதுரை வடக்கு வட்டாட்சியர் எம்.கே.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். 1912-ம் ஆண்டு பத்திரம் அடிப்படையில், பிபிகுளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த அரசன் தற்போது கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைச்சாமி பல்லவராயர் மனைவி ராமாயி அயியார், இவர் களது வாரிசுகள் செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்ப ராஜ், ஜோதி, கீதா ஆகியோர் பெயரில் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதையறிந்த மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், மதுரை கோட் டாட்சியர் செந்தில்குமாரியிடம் புகார் அளித்தது. விசாரணை நடத் திய கோட்டாட்சியர், பிபிகுளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த அரசனை பணியிடை நீக்கம் செய் தார். இவர் இலுப்பகுடி கிராமத்துக்கு பணிமாறுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு வட்டாட்சியருக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘‘இதுபோன்று கோயில் பெயரில் உள்ள சொத்துகளை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாறுதல் செய்வதற்கு அதிகாரம் இல்லை. உரிய ஆவணங்கள் இருந் தாலும் இதை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து உரிய உத்தரவை பிறப்பித்த பின்னரே பட்டா மாறுதல் செய்ய முடியும். மேலும் நிலம் யார் பெயரில் உள் ளதோ அவர்களுக்கு விளக்கம் அளிக்கவோ, ஆவணங்களை தாக் கல் செய்யவோ உரிய வாய்ப்பை அளித்த பின்னரே முடிவு செய்ய முடியும். இது போன்ற பல நடை முறை விதிகளை மீறி இந்த பட்டா வழங்கப்பட்டுள்ளதால் கிராம நிர் வாக அலுவலர் இடைநீக்கம் செய் யப்பட்டுள்ளார். மேல்நடவடிக்கைக் காக மாவட்ட ஆட்சியருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.