சென்னையில் 1.11 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு:20ஆயிரம் பேரின் மனுக்கள் பரிசீலனை

சென்னையில் 1.11 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு:20ஆயிரம் பேரின் மனுக்கள் பரிசீலனை
Updated on
1 min read

சென்னையில் 1.11 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 20ஆயிரம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி 10-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெயர் விடுபட்டவர்கள், திருத்தங்கள் வேண்டுபவர்கள் உரிய விண்ணப் பங்களை சமர்ப்பித்தனர்.

மேலும் புதிதாக வாக்களிப் பவர்கள் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பங்கள் அளித்து வந்தனர்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனுமதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 9-ம் தேதி சிறப்பு முகாம்களும் நடத்தப் பட்டன.

மேலும் மார்ச் 25 வரை விண்ணப்பிக்கவும் கெடு விதிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் ஜனவரி 10 முதல் மார்ச் 25-ம் தேதி வரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 843 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித் துள்ளனர்.

அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 13,260 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விருகம்பாக்கத்தில் 10 ஆயிரத்து 250 விண்ணப்பங்களும், தி.நகரில் 10 ஆயிரத்து 001 விண் ணப்பங்களும் பெறப்பட்டன.

குறைந்தபட்சமாக ராயபுரம் தொகுதியில் 5 ஆயிரத்து 469 பேர் விண்ணப்பம் அளித்துள் ளனர்.

இதில் 1 லட்சத்து 11ஆயிரத்து 683 பேரின் மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன. 3,405 பேரின் நிராகரிக்கப்பட்டுள் ளன. மேலும் 22,755 பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்பட்டது. அப்போது தயாரிக்கப்பட்டிருந்த பட்டியல்தான் பிரதான பட்டியலாக இருக்கும்.

அக்டோபர் முதல் ஜனவரி வரை பெறப்பட்ட விண்ணப் பங்களின் அடிப்படையில் முதல் துணைப் பட்டியலும் ஜனவரி 10 முதல் மார்ச் 25-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இரண்டாவது துணைப் பட்டியலும் வெளி யாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in