அடுத்த தேர்தலில் பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: அன்புமணி திட்டவட்டம்

அடுத்த தேர்தலில் பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: அன்புமணி திட்டவட்டம்
Updated on
1 min read

அடுத்த தேர்தலில் பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் சென்னை அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட எம்எம்டிஏ காலணி பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது.

இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

''பாமக ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் 23 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. பாமக வெற்றி பெறாவிட்டாலும் ஒரு படி முன்னேறி உள்ளோம். இன்னும் வேகமாக பணியாற்ற உற்சாகமாக உள்ளோம். 234 தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளும் மாறி மாறி பணத்தை வாரி இறைத்தன. வெற்றி பெற்றவர்களின் முகத்தில் சந்தோஷம் இல்லை. திமுக தேர்தலில் வெற்றி பெற்றாலும் இழவு வீடு போல் உற்சாகம் இல்லாமல் உள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரு புகார்க்கு கூட நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதிகாரமற்ற ஆணையத்தை வைத்து தேர்தல் நடைபெற்றது. அடுத்த தேர்தலில் பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என்று அன்புமணி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in