Published : 12 Apr 2017 07:19 PM
Last Updated : 12 Apr 2017 07:19 PM

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

விருதுநகரில் ரூ.50 கோடி செலவைல் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் ஒரு அரசு பல்மருத்துவக் கல்லூரி மட்டுமே சென்னையில் உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், மற்றும் கூடுதல் கட்டிடம் போன்ற தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இந்த பல் மருத்துவமனை ஓர் ஒப்புயர்வு மையமாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னை தவிர வேறு எங்கும் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஜெயலலிதா தென் தமிழகத்தில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி 50 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் என்று 25.8.2015 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தென் தமிழகத்தில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி ஒன்றுதொடங்கிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்காக ஒரு கல்லூரிமுதல்வர் பதவியினை உருவாக்குவதற்கும் தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் தென் தமிழக மாணவர்கள் அதிக அளவில் பல்மருத்துவம் பயிலுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x