

ஆர்.கே.நகர் இடைத்தேர்லில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் இ.மதுசூத னனுக்கு ஆதரவு அளிப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார். ஓபிஎஸ்ஸுடன் இணைந்து அவர் இன்று முதல் பிரச்சாரம் செய்ய உள் ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருந்தார். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று காலை 11 மணி அளவில் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்ட நிர்வாகிகளு டன் ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றார். அங்கு வாசனை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமாகா மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், என்எஸ்வி சித்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், அனைவரும் ஓபிஎஸ் இல்லத்துக்கு வந்தனர். அங்கு இரு தரப்பினரும் மீண்டும் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத் திய பிறகு, இரு தலைவர் களும் செய்தியாளர்களை சந்தித் தனர். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமாகாவுக்கு நம்பிக்கை இல்லை என கூறியதைத் தொடர்ந்து, கடந்த 2 வாரமாக அனைத்து மாவட் டங்களிலும் உள்ள நிர்வாகிகளை சந்தித்தேன். இதற்கிடையில் ஓபிஎஸ் அணி மூத்த நிர்வாகிகள் என்னை சந்தித்து, மதுசூதனனுக்கு ஆதரவு தருமாறு கேட்டனர். தமாகா நிர்வாகிகளும் இதே கருத்தை வலியுறுத்தினர். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இ.மதுசூதனனை தமாகா முழு மனதோடு ஆதரிக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் நம்பிக்கையைப் பெற் றவர் ஓபிஎஸ். அவரது தலைமையில் நடக்கும் தர்மயுத்தத்துக்கு தமாகா துணைநிற்கும். மதுசூதனனுக்கு ஆதரவாக தமாகாவினர் தேர்தல் பணியாற்றுவார்கள். ஓபிஎஸ் உடன் நான் நாளை முதல் பிரச்சாரத்தில் பங்கேற்கிறேன்.
தொடர்ந்து வளர்ச்சிப் பாதை யில் தமிழகத்தை அழைத்துச் செல்லக்கூடிய நம்பிக்கைக்குரிய கூட்டணியாக இது தொடரும். தொகுதியில் நடக்கும் விதிமீறல் களை தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். பணநாயக முறைப்படி நடக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘‘எங்கள் தர்மயுத்தம், அறப்போராட்டத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. எதிர்காலத்திலும் தமிழக முன்னேற்றத்துக்காக தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். விதிமீறும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பவர்களை தகுதிநீக்கம் செய்ய வழிவகை இருந்தால் அதையும் நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.