

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில், தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கோவையில் கொமதேக மாநகர் மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செய லாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில், தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும் வழக்கு தொடுப்பது அவசியம்.
காவிரியில் இருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிட நீதிமன்றமே காரணம் என்பதை யும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக மணல், ஜல்லி அனுப்புவதைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.