விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாரிமுனையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாரிமுனையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
Updated on
1 min read

விவசாயிகளுக்கு ஆதரவு தெரி வித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர் கள் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் காய்ந்து போன பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 16 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரி வித்து தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இளைஞர்களும், மாணவர் களும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பாரிமுனையில் உள்ள குறளகம் அருகே என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமர்ந்து நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, “விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளு படி செய்ய வேண்டும், அவர்களது பிரச்சினைகளுக்கு மத்திய - மாநில அரசுகள் உடனடி தீர்வு காண வேண்டும்” என்று முழுக்கமிட்டனர்.

தகவலறிந்த எஸ்பிளனேடு போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 மாணவர்களையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர். சாலை மறியல் காரண மாக பாரிமுனையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in