

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் சரிபார்ப்பு பணி அடுத்த 2 நாட்களில் நிறைவடைந் தவுடன் நிவாரணத் தொகை வழங்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்திய கோபால் தெரிவித்தார்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் பருவ மழை-2016 குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கே.சத்தியகோபால் பேசியதாவது:
தமிழகத்தில் 32 லட்சம் விவசாயிகள் வறட்சியால் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இடுபொருள் நிவாரண உதவித் தொகை ரூ.2,247 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தத் தொகையை விவசாயி களின் வங்கிக் கணக்கில் நேரடி யாக செலுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதற்காக, விவசாயிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் பெறப் பட்டு அவை சரிபார்க்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணி 2 நாளில் நிறைவடையும். அதன் பிறகு அந்தந்த மாவட்ட ஆட்சி யர்கள் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக நிவாரணம் வழங்கப் படும்.
குடிநீர் பிரச்சினையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் மாவட்ட ஆட்சியர் களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்தாலோசித்து வருகிறோம். நீர் மேலாண்மை மூலம் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் இடங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோடைக்காலத்தில் மழை பெய்தால், அந்த நீரை சேகரிக் கும் வகையில் ஒவ்வொரு மாவட் டத்திலும் அரசு உத்தரவுப்படி பல்வேறு நீர் சேகரிப்பு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த ஒரு மாதத்தில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நீர் மேலாண்மை திட்டங்களுக்காக ரூ.105 கோடியை தற்காலிகமாக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.