Published : 14 Sep 2016 07:52 AM
Last Updated : 14 Sep 2016 07:52 AM

எழுத்தாளர்களை போற்றுவது பண்பாட்டையும், கலாசாரத்தையும் போற்றுவதாகும்: எழுத்தாளர் பிரபஞ்சன் பேச்சு

எழுத்தாளர்களை போற்றுவது என்பது பண்பாட்டையும், கலாசாரத் தையும் போற்றுவதாகும் என எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினார்.

ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நினைவு தின நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எழுத்தாளர் பிரபஞ்சன் பேசியதாவது:

அன்பைக் காட்டிலும் நியாய உணர்வுதான் முக்கியம் என்று சூடாமணி கூறுவார். ஆனால், அவருடைய ஒட்டுமொத்த கதைகளிலும் அடைத்துக் கொண் டிருப்பது அன்பு ஒன்றுதான். அவருடைய நினைவை, அவ ருடைய இருப்பை, சாதனையை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும்.

ஒரு மேன்மைகொண்ட எழுத் தாளரை சமூகத்தில் மரியாதை செய்வது, அவர் சமூகத்துக்கு அளித்த பங்களிப்பை எடுத்துச் சொல்வது போன்றவையெல்லாம், அந்த சமூகம் வாழ்கின்ற பண்பாட்டை, கலாசாரத்தை தூக்கி பிடிப்பது என்று அர்த்தம் ஆகும். எந்த சமூகமும் வாழ்ந்து பெற்ற பயன்தான் கலாச்சாரம்.

சமூகம், கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து எது நல்லது என்று உணர்ந்து தொகுத்திருக்கிறது. அதன் பேர்தான் பண்பாடு. அந்த பண்பாட்டின் மனித முகங்கள்தான் எழுத்தாளர்கள். எழுத்தாளர்களை போற்றுவது என்பது பண்பாட்டையும், கலாச் சாரத்தையும் போற்றுவதாகும். சூடாமணியை போற்றுவது என்பது அன்பையும், நியாய உணர்வையும் போற்றுவதாகும் என்று அவர் பேசினார்.

முன்னதாக ‘மூன்றாம் அரங்கு’ நாடகக் குழு சார்பில் கருணா பிரசாத் வழங்கிய ‘நான்காம் ஆசிரமம்’ நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, சூடாமணி நினைவு அறக்கட்டளையின் அறங் காவலர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x