

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஆளுநர் சிஎச்.வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
அக்கடிதத்தில், ‘தமிழ்ப் புத்தாண்டு எனும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், தமிழகத்தில் முழுமையான வளர்ச்சி, முன்னேற்றம், செழிப்பு ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், ‘தமிழ் புத்தாண் டுக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியமைக்கு நன்றி’’ என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.