இந்தியா - இலங்கை இடையே கொழும்புவில் 7-ல் பேச்சுவார்த்தை: படகுகளை விடுவிக்க மீனவர்கள் வலியுறுத்தல்

இந்தியா - இலங்கை இடையே கொழும்புவில் 7-ல் பேச்சுவார்த்தை: படகுகளை விடுவிக்க மீனவர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையும், தொடர்ந்து நவம்பர் 5-ல் இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய கூட்டறிக்கையில் “இரு நாடுகளுக்கிடையிலான மீன்வளம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசி முடிவு எடுக்க கூட்டு செயல்திட்ட குழு (Joint working group on Fisheries) கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறையும், இரு நாட்டு மீன்வளத் துறை அமைச்சர்கள் கூட்டத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறையும் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த ஜனவரி 2-ல் இருநாட்டு வெளியுறவு அமைச்சகங்கள், கடற்படை, கடலோர காவல்படை பிரதிநிதிகள் பங்கேற்ற 2-வது பேச்சுவார்த்தை கொழும்புவில் நடை பெற்றது. இந்நிலையில் 3-வது கட்ட பேச்சு வார்த்தை ஏப்ரல் 7-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராமேசு வரத்தில் நேற்று நடைபெற்ற மீனவ சங்கப் பிரநிதிகளின் கூட்டத்தில், கடந்த 2 ஆண்டு களாக இலங்கை கடற்படையினரால் கைப் பற்றப்பட்ட 145 படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் ஏப்ரல் 25-ம் தேதி கச்சத் தீவு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in