

பெரியார் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மு.ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 4963 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான போட்டித்தேர்வுகள் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்வை எழுதும் மாணவ மாணவியருக்கு பெரியார் பயிற்சி மையம் பயிற்சியளிக்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 10-ம் தேதி முதல் தொடங்குகின்றன.
மேலும், பெரியார் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளன. ஐ.ஏ.எஸ் முதல்நிலை, முதன்மை (மெயின்) மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு வழங்கப்படும் பயிற்சியின் காலம் 8 மாதம் ஆகும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது. இதுபற்றி மேலும் விவரங்களை அறிய பெரியார் பயிற்சி மையத்தின் தொலைபேசி எண்ணான 044-26618056-ஐ தொடர்பு கொள்ளலாம்.