ஜெயலலிதாவின் ஜாமீன் விடுதலைக்காக முடி காணிக்கை செலுத்திய அமைச்சர்கள்

ஜெயலலிதாவின் ஜாமீன் விடுதலைக்காக முடி காணிக்கை செலுத்திய அமைச்சர்கள்
Updated on
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதால் செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன் றம் கடந்த மாதம் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, அன்றே கர்நாடகா வில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம், திருவிளக்கு பூஜை, பால் குடம், காவடி, முடி காணிக்கை, தேர் இழுத்தல் என பல்வேறு வழிபாடுகளில் அதிமுகவினர் ஈடுபட்டனர். மேலும் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தாடியுடன் காணப்பட்டனர்.

இந்நிலையில், 21 நாள் சிறை வாசத்துக்குப் பின் கடந்த 18-ம் தேதி ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அதன்பிறகும் பல அமைச்சர்கள் தாடியை அகற்றவில்லை. சிலர் தீபாவளியைக் கூட கொண்டாடவில்லை.

இந்நிலையில், அமைச்சர் செல் லூர் கே.ராஜூ நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தி வந்துள்ளார். இவரைப் போல அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். விரைவில் மேலும் சில அமைச்சர்களும் முடிகாணிக்கை செலுத்த உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in