

126 தமிழக வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன்சில் இடை நீக்கம் செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் குழு டெல்லி செல்ல உள்ளதாக அதன் துணைத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் நேற்று அவர் கூறியதாவது:
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்கள் தற்போது குறிப் பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை பார் கவுன்சி்ல் மனதார வரவேற்கிறது. இதற்காக கடந்த ஒன்றரை மாதங் களுக்கும் மேலாக தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த தமிழக வழக்கறி ஞர்கள் உடனடியாக தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு இன்று முதல் பணிக்கு திரும்ப வேண்டும்.
அத்துடன் இந்த போராட்டம் காரணமாக இந்திய பார் கவுன்சிலால் இடைநீக்கம் செய்யப்பட்ட 126 தமிழக வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு இந்திய பார் கவுன்சிலுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
நாளை சந்திப்பு
அத்துடன் இது தொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், துணைத்தலைவரான நான், அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகியான எஸ்.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் ஒட்டுமொத்த பார் கவுன்சில் உறுப்பினர்களும் ஜூலை 28-ம் தேதி (நாளை) டெல்லி சென்று நேரடியாக இந்திய பார் கவுன்சில் தலைவரை சந்தித்து, 126 வழக்கறிஞர் களின் இடைநீக்கத்தையும் உடனடியாக ரத்து செய்ய கோர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.