

நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்காவிட்டால் நமக்குத்தான் பெரிய இழப்பு என்று டிஐஎப்ஏசி தலைவரும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனில் ககோட்கர் தெரிவித்தார்.
இந்திய வளர்ச்சி அறக்கட்டளை (ஐடிஎப்), தொழில்நுட்ப தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழு (டிஐஎப்ஏசி), எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து தொழில்நுட்ப தொலை நோக்கு திட்டம் 2035 குறித்த தேசிய கருத்தரங்கம் தொடக்க விழா சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் நேற்று நடந்தது.
மூத்த அணு விஞ்ஞானி ஏ.பி.ஜெயராமன் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை செயலாளர் மற்றும் தாளாளர் தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் பேசினார். தொழில்நுட்ப தொலை நோக்கு திட்டம் குறித்து டிஐஎப்ஏசி தலைவர் கவுதம் கோசுவாமியும், தொழில்நுட்ப தொலைநோக்கு ஆவணம் பற்றி டிஐஎப்ஏசி செயல் இயக்குநர் பிரபாத் ரஞ்சனும் விரிவாகப் பேசினர்.
அதையடுத்து டிஐஎப்ஏசி தலை வரும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனில் ககோட்கர் சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தொழில்நுட்ப தொலை நோக்குத் திட்டம் 2020 நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், தொழில்நுட்ப தொலை நோக்குத் திட்டம் 2035 நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரமான வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டுள்ளது. வருங்கால இந்தியாவின் சேவையில் தொழில் நுட்பமானது, ஒவ்வொரு இந்திய னின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்தி, செல்வ செழிப்பை அதிகரித்து, தனி அடையாளத்தை வலுப்படுத்தும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்று வதற்கு வருங்காலத்தில் தொழில் நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?, எந்தெந்த துறைக ளில் எத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த நாம் தயாராக வேண்டும்? என்று தொலை நோக்கு ஆவணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தனி மனித மேம்பாடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கிய தொழில்நுட்பம் குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும் என்றார் அனில் ககோட்கர்.
இக்கருத்தரங்கில், இந்திய வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஏஆர்கே.பிள்ளை உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். நிறை வாக, இந்திய வளர்ச்சி அறக்கட் டளை தேசிய ஒருங்கிணைப்பாளர் நாராயணன் பி.ஐயர் நன்றி கூறினார்.
அதன் பிறகு டிஐஎப்ஏசி தலைவரும், அணுசக்தி ஆணை யத்தின் முன்னாள் தலைவருமான அனில் ககோட்கர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “சீனாவில் நியூட்ரினோ ஆய்வு மையம் கட்டத் தொடங்கிவிட்டனர். அதுபோல நம் நாட்டிலும் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத்தான் அது பெரிய இழப்பாகும். உலகில் உள்ள பெரிய அணுமின் திட்டங் களில் கூடங்குளம் அணுமின் திட்டமும் ஒன்றாகும். பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் அந்த அணுமின் நிலையம் தேவைப் படும் நேரத்தில் நிறுத்தி இயக்கப் படுகிறது. பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. மற்றபடி கூடங்குளம் அணுமின் நிலையம் சிறப்பாகத்தான் செயல்படுகிறது” என்றார்.