Last Updated : 09 Mar, 2014 01:20 PM

 

Published : 09 Mar 2014 01:20 PM
Last Updated : 09 Mar 2014 01:20 PM

கூட்டணிக் கதவை கலைஞர் திறந்தால் இன்னொருவர் அதைச் சாத்துகிறார்- ஸ்டாலின் குறித்து மு.க.அழகிரி ஆவேசம்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வருவதுபோல் கலைஞர் திமுக கூட்டணி கதவைத் திறந்தால், இன்னொருவர் அதை சாத்துகிறார் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

தேமுதிக-வுடன் திமுக கூட்டணி முயற்சியில் இறங்கியபோது, விஜயகாந்தை கடுமையாக விமர்சித் தார் மு.க.அழகிரி. இப்போது பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கும் நிலையில் இதுகுறித்து அழகிரியின் கருத்தை அறிவதற்காக அவரை அலை பேசியில் தொடர்பு கொண்டோம். அவர் அளித்த பேட்டியிலிருந்து..

நீங்கள் ஏற்கெனவே சொன்ன மாதிரியே தே.மு.தி.க - தி.மு.க. கூட்டணி ஏற்படாமல் போய் விட்டதே?

(எரிச்சலாக) அதுதான் ஏற்கெனவே நான் சொல்லிட் டேன்ல. அப்புறம் என்ன கருத்து கேட்கிறீங்க? தேமுதிக சேரலைல. அதோடு விடுங்க. அவ்வளவுதான் அது அவங்க தலையெழுத்து.

நீங்கள் இல்லாததால் தென் மாவட்ட திமுக-வில் தேர்தல் பணிகள் சுணக்கமடைந்துள்ளதாக கூறுகிறார்கள். தலைமை கேட்டுக்கொண்டால், தேர்தல் பணிக ளைத் துரிதப்படுத்துவீர்களா?

இதை என்கிட்ட கேட்கவே வேண்டியது இல்லை. தென் மாவட்டத்தில் தேர்தல் பணி சுணக்கமாத்தான் இருக்கு அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? வேலை பார்க்கச் சொல்லி தலைமையும் கேட்காது. நான் சேரவும் மாட்டேன். எனக்கு சில கோரிக்கைகள் இருக்கு. அதை எல்லாம் நிறைவேற்றினால்தான் நான் திமுக-வில் சேர்வேன். இல்லைன்னா கிடையாது.

ஒரு வேளை கம்யூனிஸ்ட்கள் திமுக அணிக்கு வந்தால் வரவேற்பீர்களா?

எம்.ஜி.ஆர். நடிச்ச அலிபாபா வும் 40 திருடர்களும் படம் பார்த்திருக்கீங்களா? அதுல ‘அண்டாகா கசம் அபூகாகுகும் கதவை திறந்திடு சீசே’ என்று சொல்லுவாங்க. அதேமாதிரி ‘அண்டாகா கசம் அபூகா குகும் மூடிடு சீசே’ என்றும் ஒரு டயலாக் வரும். திமுக-வுல இப்ப அது மாதிரிதான் நடந்துக்கிட்டு இருக்கு. அதாவது கலைஞர் கூட்டணி கதவு திறந்திருக்குங்கிறாரு. இன் னொருத்தரு மூடியிருக்குங்குறாரு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x