

பழம் பெரும் நடிகை மனோரமா நெஞ்சுவலி காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை மனோரமா கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவருடைய உறவினர்கள் உடனடியாகச் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:
மனோரமாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. திங்கள் கிழமை காலைதான் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் பற்றி தெரிவிக்கமுடியும் என்றனர்.