Last Updated : 13 Mar, 2017 12:23 PM

 

Published : 13 Mar 2017 12:23 PM
Last Updated : 13 Mar 2017 12:23 PM

ஸ்ரீ பெரும்புதூரில் பராமரிப்பில்லாமல் பரிதாப நிலையில் காமராஜர் திறந்து வைத்த மணிக்கூண்டு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்த மணிக்கூண்டு பராமரிப்பின்றி பழுதாகியுள்ளது இதனை புனரமைத்து பராமரிக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒரு பழமை யான நகரம். இங்கு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் உள்ளது. ஸ்ரீராமனுஜர் திருஅவதாரம் செய்த பூமி இது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் கட்ட பெற்ற பல்வேறு புராதான சின்னங்கள் உள்ளன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூருக்கு பெருமை சேர்க்கும் மற்றுமொரு சின்னம் தான் காமராஜர் திறந்து வைத்த மணிக்கூண்டு.

ஸ்ரீபெரும்புதூர் - பூந்தமல்லி சாலை; ஸ்ரீபெரும்புதூர் - திருவள் ளுவர் சாலை; ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் சாலை ஆகிய 3 சாலைகளின் சந்திப்பில் இந்த மணிக்கூண்டு உள்ளது. கடந்த 1955-ம் ஆண்டு காமராஜர் முதல் வராக இருந்தபோது திறந்து வைக்கப்பட்டது. நான்கு திசைக ளிலும் கடிகாரம் பதிக்கப்பட் டிருக்கும். ஸ்ரீபெரும்புதூரின் அடையாளங்களில் ஒன்றாக இந்த மணிக்கூண்டு மாறியது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மணிக்கூண்டு பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கிறது.

மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் பழுதாகி விட்டது. மணிக்கூண்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலிகள் உடைக்கப்பட்டு அலங்கோலமாக மாறி உள்ளது. கடிகாரங்கள் மற்றும் தூண்கள் கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.1.50 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் இதனை பராமரித்து வந்தது.

இந்நிலையில் தொடர் பராமரிப்பு இல்லாததால் இந்த கடிகாரங்கள் பழுதடைந்தன. பாரம்பரியமிக்க மணிக்கூண்டை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி கூறியதாவது: ஸ்ரீ ராமனுஜர் 1000-வது ஆண்டை முன்னிட்டு அடிப்படை வசதிகள் செய்யப் படவுள்ளது.

அப்போது மணிக்கூண்டு சீரமைக்கப்படும். இதற்காக மதிப் பீடு தயாரிக்கும்படி பொறியாள ருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூந்தமல்லி சாலை - திருவள்ளுவர் சாலை - காஞ்சிபுரம் சாலை ஆகிய 3 சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ள மணிக்கூண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x