

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் விவசாய தொழிலாளர்கள், சிறு,குறு விவசாயிகளுக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், தமிழகத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், விவசாய தொழிலாளர்கள், அவர்கள் குடும் பத்தினர் என அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் உறுதுணை யாக இருக்கும் வகையில், புதிய விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டம், ‘முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’ என்ற பெயரில் 2011-ல் அறிமுகப் படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குடும்ப உறுப்பினர் களுக்கு கல்வி, திருமணம், மகப் பேறு உதவித் தொகைகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் விவசாய உறுப்பினர்களாக பதிவு செய்தவர் கள் இயற்கை மரணம் அடைந்தால், அவர்கள் குடும்பத்துக்கு உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவை அடுத்து, இந்த உதவித் தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.