முருகப் பெருமானின் முக்கிய பண்டிகையான தைப் பூசத்துக்கு பொது விடுமுறை அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பூரைச் சேர்ந்த அண்ணா துரை என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகத்தில் தமிழ்க் கடவு ளான முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளன. இந்த திருத்தலங்களில் தைப் பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். வரும் பிப்ரவரி 10-ம் தேதி தைப்பூசம் வருகிறது. இத்திருவிழா தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா என உள்நாட்டிலும் மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், மியான்மர், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா போன்ற வெளி நாடுகளிலும் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியாவில், தைப் பூசத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
வடமாநில பண்டிகைகளான கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, ராம நவமி, துர்காஷ்டமி போன்ற பண்டிகைகளுக்கு அரசு பொது விடுமுறை அளிக்கிறது. ஆனால், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத்துக்கு எந்த விடுமுறையும் அளி்க்கப்படுவ தில்லை. தைப் பூசத்துக்கு பொது விடுமுறை அளிக்கக் கோரி கடந்த நவம்பர் 21-ல் தமிழக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பினேன். அதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, தைப் பூசத் திருவிழா அன்று பொது விடுமுறை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தைப் பூசத் துக்கு சிங்கப்பூர், மலேசியாவில் விடுமுறை விடுவதாக கூறுகிறீர் கள். அந்த நாடுக ளில் ஆண்டுக்கு எத்தனை பொது விடுமுறை அளிக் கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என கேட்டனர்.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘எனக்கு அந்த விவரம் தெரியாது. முருகப் பெரு மானின் முக்கிய விழாவான தைப் பூசத்துக்கு பொது விடுமுறை விடவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை’’ என்றார். கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘இந்த மனு விளம்பரத் துக்காகவும், அரசியல் லாபத்துக் காகவும் தாக்கல் செய்யப்பட் டுள்ளது’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.