

தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் போராட்டங்கள் நடத்த தடை விதிக்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த டி.ஜே.எபனேசர்சார்லஸ், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது, டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ கத்தில் அனுமதி பெறாத போராட்டங்கள் நடைபெறும் போது, அந்த போராட்டங்களை முன்கூட்டியே தடுப்பது அல்லது போராட்டங்களால் பொதுமக்க ளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பது ஆகிய இரு நடவடிக்கைகளை போலீஸார் எடுக்கின்றனர்.
தமிழகத்தில் 2016-ல் முன் னெச்சரிக்கையாக 1417 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை 1834 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பெறாமல் சாலை மறியல் உள் ளிட்ட போராட்டங்கள் நடத்திய தாக கடந்த ஆண்டில் 1506 வழக்கு களும், இந்தாண்டு 1247 வழக்கு ளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என பதில் மனுவில் கூறப்பட் டிருந்தது.
நீதிபதிகள் வேதனை
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி வாதிட்டார். விசாரணையின் போது அனுமதியின்றி போராட் டம் நடத்துவோர் கைது நட வடிக்கையில் இருந்து தப்பிக்க மாணவர்கள், சிறுவர்கள், குழந் தைகளை போராட்டத்தில் முன் நிறுத்துகின்றனர். இது இப்போது வழக்கமாகவிட்டது. இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது என வேதனை தெரிவித்தனர்.
மேலும், பொது இடங்களில் எவ்வித அனுமதியும் பெறாமல் கோரிக்கைகளை வலிறுத்தி போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்குமா? குடங்களை எடுத்து வந்து போராடினால் தண்ணீர் கிடைத்துவிடுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பொது அமைதிக்கு குந்தகம்
பின்னர், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தெருக்களில் உரிய அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல் உள்ளிட்ட போராட்டங் களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.