Published : 09 Mar 2017 09:35 AM
Last Updated : 09 Mar 2017 09:35 AM

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி பேசுவது நாகரிகமல்ல: அமைச்சர் சரோஜா ஆவேசம்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி பேசுவது நாகரிகமல்ல என்று சமூகநலத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலு வலகத்தில் அவர் செய்தியாளர் களுக்கு நேற்று அளித்த பேட்டி:

நான் ஒரு மகப்பேறு மருத்துவர். நான் ஒரு பெண் மருத்துவர். ஜெய லலிதா ஒரு பெண். அவர் இறைவ னிடம் சேரும் போது 69 வயதை எட்டிக் கொண்டிருந்தார். ஒரு பெண் ணுக்கு வயதுக்கு ஏற்ப மாற்றங் கள், பிரச்சினைகள், நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், சர்க்கரை, முட்டி வலி, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்தது.

டாக்டர்கள் செய்து கொண்ட சத்தியப் பிரமாணத்தின்படி நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைப் பற்றி வெளியே சொல்ல மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி கொச்சைப்படுத் திப் பேசுவது தவறு. அது நாகரிக மல்ல. ஜெயலலிதாவுக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை பற்றி விவாதிக் கவோ, விசாரணை கமிஷன் அமைக்கக் கோருவதோ நியாய மல்ல. ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது. ஜெய லலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச் சைகள் பற்றி எய்ம்ஸ் மற்றும் அப்போலோ டாக்டர்கள் அறிக்கை வெளி யிட்டுள்ளார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஒரு ஆண்டு 3 மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவரால் மத்திய அமைச்சராக செயல்படமுடியவில்லை. கருணா நிதி உடல்நலக் குறைவால் இருக் கிறார். மு.க.ஸ்டாலின் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வரு கிறார். யாருக்கு என்ன பிரச்சினை என்பது எங்களுக்கு தெரியும். அதைப்பற்றி எல்லாம் நாங் கள் கேட்பதில்லை. ஜெயலலிதா வின் சிகிச்சைப் பற்றி பேசுவதை இதோடு விட்டு விடுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x