எந்த தொழில் நிறுவனமும் தமிழகத்தில் இருந்து வெளியில் செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி

எந்த தொழில் நிறுவனமும் தமிழகத்தில் இருந்து வெளியில் செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி
Updated on
1 min read

எந்த தொழில் நிறுவனமும் தமிழ கத் தில் இருந்து வெளியில் செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தொழில்துறை அமைச் சர் எம்.சி.சம்பத் சட்டப்பேரவையில் தெரி வித்தார்.

இது தொடர்பாக நேற்று சட்டப் பேரவையில் நடந்த விவாதம்:

கே.ஆர்.ராமசாமி (சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர்):

500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இலவச திட்டங்களாலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயை ஏன் அதிகரிக்கவில்லை? ஒரு ஐஏஎஸ் அதிகாரி அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் .அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

வருவாயை அதிகரிக்க விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும், இதை கருத்தில் கொண்டுதான் நெல்தானிய உற்பத்தியை 127 லட்சம் டன்னில் இருந்து 147 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாயை பெருக்க நல்ல முயற் சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் வருவாய் அதிக ரிக்க வாய்ப்புள்ளது.

கே.ஆர்.ராமசாமி:

ரூ.100 கோடி முதலீட்டில் உலக முதலீட்டாளர் கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன் விளைவு என்ன? தற்போது எவ்வளவு முதலீடு வந்துள்ளது. எத்தனை நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன?

மின்துறை அமைச்சர் பி.தங்க மணி:

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஓராண்டுதான் ஆகின்றது. ஒப்பந்தத்தில் 3 முதல் 7 ஆண்டுக்குள் தொழிற்சாலை அமைப்பதாகத்தான் கூறப்பட்டுள் ளது.

நிதியமைச்சர் பன்னீர்செல்வம்:

இதுவரை ரூ.23 ஆயிரத்து 258 கோடிக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன. 48 ஆயிரத்து 145 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

கே.ஆர்.ராமசாமி:

முதலீட்டாளர் கள் மாநாட்டை தொடர்ந்து நடத்த வேண்டும். அதிகமான முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்:

தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்ப தால், இங்கு அதிக நிறுவனங்கள் வருகின்றன. ஒப்பந்தம் செய்ததில் 7 நிறுவனங்கள் தொழில் தொ டங்கி யுள்ளன. 7 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. ஒற்றை சாளர முறையில் அனும திகள் அளிக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்கள் செல்ல அனுமதிக் கப்படாது.

ஊரக தொழில்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி:

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 10 ஆயிரத்து 71 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ.16ஆயி ரத்து 532.67 கோடிக்கு ஒப்பந்தங்கள் செய்தன. இதில், 3 ஆயிரத்து 156 நிறுவனங்கள். ரூ.2 ஆயிரத்து 724.64 கோடி முதலீடு செய் துள்ளன. இதன் மூலம் 36 ஆயிரத்து 219 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இவ்வாறு சட்டப் பேரவையில் விவாதம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in