

வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் 28வது தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கடை பிடித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து கழக ஆணையரக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சாலை விபத்துக்களை குறைக்க தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் நாடுமுழு வதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட் டோர் இறக்கின்றனர். எனவே, பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி யது அவசியமாக இருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் 28வது சாலை பாதுகாப்பு வார மாக கடைபிடிக்க வேண்டுமென மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சகம் உத் தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநி லங்களில் இருக்கும் போக்குவரத் துத் துறை, போக்குவரத்து போலீஸ், கல்வித்துறை, மாவட்ட அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறையினர் மூலம் சாலை விழிப்புணர்வு தொடர்பாக கருத்தரங்குகள், கண்காட்சிகள், விநாடி வினா, கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தவும் அந்த உத்தரவில் வலியுறுத்தியுள்ளது. மேற்கொண்ட பணிகள் தொடர் பாக முழு அறிக்கையை வரும் 31-ம் தேதிக்குள் மத்திய அமைச்ச கத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.