

விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி மோனிஷாவின் மறு பிரே தப் பரிசோதனை சென்னை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்து முடிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே பங்காரம் கிராமத் தில் உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி யில் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இது தற்கொலை அல்ல, திட்ட மிட்ட கொலை எனக் கூறி இறந்த மாணவிகளின் பெற்றோர் சென் னையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இரு பெற்றோர் ஒப்புதல்
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சரண்யா, பிரியங்கா உடல்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பிரேதப் பரிசோதனை நடத்தி ஒப்படைக்கப்பட்டன. மோனிஷாவின் பெற்றோர், பிரேதப் பரிசோதனை நடத்த ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மோனிஷாவின் தந்தை தமிழரசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு பிரேதப் பரிசோதனை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்தார். அதையடுத்து நீதிபதி ஆர்.சுப்பையா, “மகளின் சாவில் மர்மம் இருப்பதாக தந் தையே சந்தேகப்படுகிறார். எனவே மாணவி மோனிஷாவின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது மனுதாரர் தரப்பு மருத்துவர் ஒருவரும் உடனிருக்கலாம்” என உத்தரவிட்டார்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
அதைத் தொடர்ந்து மோனிஷா வின் உடல், விழுப்புரம் மாவட் டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு நேற்று பிற்பகல் கொண்டுவரப்பட்டது. அங்கு 4 மருத்துவர்களின் முன்னிலை யில் மீண்டும் பிரேதப் பரிசோ தனை செய்யப்பட்டது. பரிசோ தனை காட்சிகள் முழுவதும் வீடி யோவிலும் பதிவு செய்யப்பட்டன. பரிசோதனை முடிந்து மாணவி யின் உடல் பெற்றோரிடம் ஒப்ப டைக்கப்பட்டது.
மாணவர்களுக்குத் தடை
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை யில் வைத்து மாணவி மோனி ஷாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள் சுமார் 20 பேர் நேற்று முன்தினம் இரவில் சென்னை வந்து, மதுரவாயல் அருகே நெற்குன்றத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தனர். இதையறிந்த போலீஸார் அவர் களை லாட்ஜிலேயே சிறை வைத் தனர். மாணவர்கள் மருத்துவ மனைக்கு வந்து பிரச்சினைகள் எதுவும் செய்துவிடக் கூடாது என் பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக் கையாக இப்படி செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் மறியல்
3 மாணவிகள் தற்கொலை செய்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முன்பு அண்ணா சாலையில் மாணவர் அமைப்பினர் நேற்று பிற்பகலில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மறியலால் அண்ணா சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.