Published : 14 Jun 2017 12:52 PM
Last Updated : 14 Jun 2017 12:52 PM

பேரவையில் கடும் அமளிக்கிடையே மாநில ஜிஎஸ்டி மசோதா தாக்கல்

சட்டப்பேரவையில் கடும் அமளிக்கிடையே சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று அதிமுக எம்எல்ஏ சரவணன் பேசியதாக வெளியான வீடியோ குறித்து விவாதிக்கக் கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட் டனர். கடும் கூச்சல், அமளிக் கிடையே தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்ப தாவது:

தற்போது மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு வரிகளை விதிக்கின்றன. முற்றிலும் வேறுபட்ட வரி வீதங்கள், வரி நடைமுறைகளை கொண்டுள்ள பல்வேறான மதிப்புக் கூட்டு வரிச் சட்டங்கள் நாட்டை தனித்தனி பொருளாதார மண்டலங்களாகப் பிரிக்கின்றன. நாடெங்கும் வணிகம் தடையின்றி நடைபெற இது முட்டுக் கட்டையாக உள்ளது. வரி செலுத்து வோருக்கு அதிக செலவை ஏற்படுத்துகிறது.

எனவே, உற்பத்தி அல்லது இறக்குமதியில் தொடங்கி கடைசி யாக சில்லரை விற்பனை வரை ஜிஎஸ்டி என்ற ஒரேயொரு வரி விதிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் இதில் ஒருமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில், மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், ஒருங்கிணைக்கப் பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், சரக்குகள் மற்றும் சேவைகள் (மாநிலங்களுக்கு உரிய இழப்பீடு) வரிச் சட்டம், யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் ஆகிய சட்டங்களை நாடாளுமன் றம் இயற்றியுள்ளது. எனவே, தமிழ் நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்ட முன்வடிவை நிறை வேற்ற வேண்டியது அவசிய மாகிறது.

மாநிலத்துக்குள் இடம்பெறும் சரக்குகள் மற்றும் சேவைகள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க மாநில அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கும். மாநிலத்தில் நேரடி வரி முறையை எளிமைப்படுத்து வதாகவும், ஒருங்கிணைப்பதாக வும் இந்தச் சட்டம் இருக்கும். இது வாணிபத்தையும், தொழில் துறையையும் போட்டி மயமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுபானங்கள் தவிர மாநிலத் துக்குள் சரக்குகள் மற்றும் சேவைகள் அனைத்தின் மீதும் 20 சதவீதத்துக்குள் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். கச்சா பெட்ரோலியம், அதிவேக டீசல், மோட்டார் ஸ்பிரிட், இயற்கை எரிவாயு, வானூர்தி இயந்திர எரிபொருள் ஆகியவற்றுக்கான வரியை ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்யும்வரை தற்போ துள்ள மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப் படும்.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் பேரில் அறிக்கை, தனி ஆணைகள் மூலம் வரி விலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படும். வரி செலுத்த தவறுபவர்களின் சரக்கு களையும் அசையும், அசையா சொத்துகளையும் கைப்பற்றுதல் அல்லது விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகளை பயன்படுத்தி வரி நிலுவைத் தொகையை வசூலிக்கவும், ஆய்வு செய்தல், சோதனையிடுதல், கைப் பற்றுதல், கைது செய்தல் ஆகிய வற்றுக்கு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.

இவ்வாறு ஜிஎஸ்டி சட்ட மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x