

பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் என்ன செய்வது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கூடி முடிவெடுக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பொழிச் சலூர் பகுதியில் உள்ள பேரேரி அம்மன் கோயில் குளம், கோவூர் தண்டலம் பகுதியில் உள்ள வடி வுடையம்மன் கோயில் குளங் களை திமுகவினர் தூர்வாரி வரு கின்றனர். இந்தப் பணிகளை நேற்று காலை பார்வையிட்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏரி, குளங் கள் உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர்வாரி சீரமைக்குமாறு திமுக வினருக்கு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை ஏற்று தமிழகம் முழுவதும் நீர்நிலை களைத் தூர்வாரும் பணிகளில் திமுக நிர்வாகிகளும், தொண்டர் களும் ஈடுபட்டுள்ளனர்.
நாங்கள் தூர்வாரும் பணியைத் தொடங்கியதும் ஆளுங்கட்சியினர் திடீரென விழித்துக் கொண்டு நீர்நிலைகளைத் தூர்வார ரூ.300 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்பட்டது. மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆனால், தொடங்கப்பட்ட பணிகள் அப்படியே முடங்கியுள்ளன.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ள வில்லை. திமுக ஆட்சியில் தொடங் கப்பட்ட நதிகள் இணைக்கும் பணிகள் அதிமுக ஆட்சியில் முடக் கப்பட்டுள்ளது. இந்தப் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அண்மையில் காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. பாஜக வேட்பாளர் அறிவிக்கப் பட்ட பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது வேறு ஏதாவது முடிவு எடுப்பதா என்பது குறித்து முடிவு செய்வது என அப்போது தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பாஜக வேட்பாளர் அறி விக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி முடிவெடுக்கும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரிப்பதில் தவறு எதுவும் இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக் கிறார். அதிமுகவை பாஜக இயக்கி வருகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.